பிலிப்பைன்ஸ் கடற்கரையில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தாலும், பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:59 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.