வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று புதன்கிழமை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனியுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலையால், யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.