பிறந்து 3 நாட்கள்: குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற பெண்

மஹியங்கனை பகுதியில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர், மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிராந்துருகோட்டே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்து மூன்று நாட்களேயான குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்