பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து பங்கேற்று பிரபலமான, நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தர்ஷன் தங்கியிருந்த வீட்டின் அருகே கார் நிறுத்துதல் தொடர்பான விவகாரத்தில் நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் , நீதிபதியின் மகன் மற்றும் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில், அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.