-யாழ் நிருபர்-
பாரதி விழாவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் திறந்தநிலைப் பேச்சுப் போட்டிக்கு 40 வயதிற்குக் குறைந்த பேச்சுத் துறை ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உடன் வழங்கப்படும் பாரதியாரோடு தொடர்புடைய தலைப்பொன்றில் ஏழு நிமிடங்கள் பேசுவதாக அமையும் இப்போட்டியில் 30.11.2025 அன்று நாற்பது வயதை அடைந்த அல்லது அதற்குக் குறைந்த வயதுடைய எவரும் பங்கேற்கலாம்.
போட்டியாளர்கள் தமது முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, வயது மற்றும் வாட்ஸ்அப் இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு பொதுச் செயலாளர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், இல 28 குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு எதிர்வரும் 04.12.2025 இற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0777117426 என்ற இலக்கத்தில் போட்டி இணைப்பாளர் த. கருணாகரனுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெற்றியீட்டும் முதல் பத்துப் பேருக்கு பெறுமதியான சான்றிதழ்களும் பரிசுப் பொருள்களும் விரைவில் இந்தியத் துணைத்தூதரகத்தாரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினரும் இணைந்து நடத்தவுள்ள பாரதிவிழாவின் போது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.