நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை படுகொலை செய்ததுடன் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நுவரெலியா கல்பாய பகுதியைச் சேர்ந்த கே.லோகேஸ்வரன் (வயது – 85) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இனந்தெரியாத குழுவொன்று நுவரெலியா டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை படுகொலை செய்து விட்டு வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த 1,052,167 ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றிருந்தது.
இந் நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தின் காசாளர் மற்றும் சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்