நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாராளுமன்றம் மற்றும் அதனை சூளவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, கொழும்பு – ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை முதல் குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, காயமடைந்த 24 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.