அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, 72.5 பில்லியன் ரூபாய்க்கான துணை மதிப்பீடு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பொது நிதி குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.