-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா பிரதான நகரில் நேற்று சனிக்கிழமை (லங்கா ஐ.ஓ.சி) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை அசுர வேகத்தில் வந்து மோதிய ஜீப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
நாய் பலத்த காயமடைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் இறந்துள்ளது.
நுவரெலியா – கண்டி வீதியில் (லங்கா ஐ.ஓ.சி) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதி ஜீப் ரக வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது என பொது மக்கள் கூறுகின்றனர் .
மேலும் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதும் ஜீப் ரக வாகனம் சம்பந்தப்பட்ட காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பிரதான வீதிகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியினை கடப்பதற்கான அமைக்கப்பட்ட இடங்களில் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செயல்படவும் தவறுகின்றனர் இதன் காரணமாகவே பாதசாரிகள் கடவையில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது .