பாணின் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் இதன் போது சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்