பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த 06 அடி 07 அங்குல நீளம் கொண்ட கடல் ஆமை ஒன்று நேற்று சனிக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.
நாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க, “உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை, இந்திய, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருவதாக அவர் தெரிவித்தார்.