குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பேருந்தை செலுத்தியதாகக் கூறப்படும் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து கவனக்குறைவாகப் பயணிப்பதாக குளியாப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த பேருந்தை சோதனையிட்ட போது சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 37 வயதுடைய பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்களை ஏனைய வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.