கென்யா நாட்டில் காகமேகா நகரில் உள்ள எரேகி பெண்கள் மேல்நிலைப்பாடசாலையில் திடீரென 100க்கு மேற்பட்ட மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை தூக்கிக்கொண்டு சக மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் மாணவிகளின் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து இரத்தம், சிறுநீர் மற்றும் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிசுமு மற்றும் நைரோபியில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்