பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பது இந்த மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.