பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் மரணம்

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் .

பழம் பறிக்க மரத்தில் ஏறி கிளை முறிந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் .

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்