பள்ளி மாணவர்கள் கடமைகள்
🔲ஒரு மனிதனின் வாழ்நாளில் மிகவும் சிறந்ததொரு காலப்பகுதியாகவே மாணவப் பருவம் காணப்படுகின்றது. மாணவர் என்பவர் முதன்மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஒருவரைக் குறிப்பதாகும். இந்த மாணவப் பருவத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்துவோமே ஆனால் எமது எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை
🔲ஐக்கிய இராச்சியம் மற்றும் பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில்இ “மாணவர்” என்பது மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்புகளில் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது; ஆரம்பஃதொடக்கப் பள்ளிகளில் சேருபவர்களும் “மாணவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.
🔲பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டுஇ போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும்.
- காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
- பாடசாலைக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.
- பள்ளிக்கு நாள்தோறும் சீருடையில் மட்டும் வருதல் வேண்டும்
- மாணவர்கள் தத்தம் வகுப்பு அறை மற்றும் பாடசாலை வளாகத்தினைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
- மாணவர்கள் கையேட்டினை நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
- தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களைப் பாடவாரியாக மாணவர்கள் கையேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.
- கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை அந்தந்தப் பாட ஆசிரியர்களிடம் நிறைவு செய்து தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
- பாடசாலையின் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
- பாடசாலைத் தேர்வு நாட்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்திட வேண்டும்.
- தவிர்க்க இயலாத காரணத்தால் விடுப்பு எடுக்க நேரிடின், விடுப்புக் கடிதம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் வகுப்பிற்குள் நுழையும்போது அமைதியாக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
- அமைதியாகவும், பணிவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
- பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
- பாடசாலையில் செயல்படும் இணைச் செயல்பாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
- கைபேசியை எக்காரணம் கொண்டும் பாடசாலைக்குக் கொண்டு வருதலைத் தவிர்த்தல் வேண்டும்.
- மாணவர்களின் பாதுகாப்பினைக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்தல் வேண்டும்.
- தலைமையாசிரியர் அல்லது வகுப்பாசிரியரின் அனுமதியில்லாமல் பாடசாலை வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியில் செலுத்தல் கூடாது.
மாணவர்களுக்குரிய கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய பலர் இன்று உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.
எனவே மேற்குறிப்பிட்ட கடமைகள் தவிர நேர முகாமைத்துவம், பொதுநலம் பேணுதல், பணிவு நடத்தை போன்ற இதர கடமைகளையும் மாணவர்கள் உரிய முறையில் அறிந்து கொண்டு அவற்றினை செயல்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
பள்ளி மாணவர்கள் கடமைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்