
பல கோடி செலவில் முழுவதும் கருங்கல்லினாலான அராலி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்
வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்றையதினம் புதன் கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையுள்ள சிம்ம லக்கினத்தில் அருள்மிகு ஞானவைரவர் சுவாமிக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விநாயகர்த்தா, திருக்கையிலை மணி பிரம்மஸ்ரீ ஆர். சிவஸ்வாமிசாஸ்திரி குருக்கள் தலைமையிலான குழுவினரால் இந்த கும்பாபிஷேக நிகழ்வு நடாத்தி வைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வில் பசு, குதிரை, யானை ஆகியன பூஜை வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த ஆலயமானது பல கோடி ரூபா செலவில் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பெற்றுள்ளது. அனைத்து கருங்கல்லு வேலைகளும் இந்தியாவிலேயே செய்யப்பட்டு இந்தியாவில் இருந்து கட்டடக்கலைஞர்களை அழைத்து வந்து அந்த கருங்கற்களை பொருத்தி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்