நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
மேலும் இன்று நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.