-யாழ் நிருபர்-
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில், கசிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், முல்லைத்தீவு பகுதியில் இருந்து 25 லீற்றர் கசிப்பினை எடுத்து வந்துள்ளார்.
இதன்போது, சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு பொலிஸாரால், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால், பேருந்தினுள் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்