-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தரொருவர் மரத்திலிருந்து தவறி நிலத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான ஞானபிரகாசம் அமலதாஸ் (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பனை தென்னை வள தொழிலைத் தனது வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
நீண்ட நேரமாக தொழிலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி தேடி சென்ற வேளை பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.