-பதுளை நிருபர்-
பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதிய நிலையில் கம்பம் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
ஹங்குரன்கெத்த, மாலியத்த, கோனகன்தென பகுதியைச் சேர்ந்த லொறியின் சாரதியான டி.எம். இமாஷா மாதவ (வயது – 30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.