பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவை மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.
இந்த மனுவில் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவுக்கு பதில் ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்டவிரோதமான நியமனம் என தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மனுவை விசாரணையின்றி நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.