பாணந்துறை தெற்கு, வாலனா வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 29 வயதுடைய ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.