
பட்டலந்தை அறிக்கையை நிராகரித்தார் ரணில் விக்கிரமசிங்க
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தையும் தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பட்டலந்தை வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகள் வழங்கியமைக்கு தான் மறைமுகமாகப் பொறுப்பு கூற வேண்டும் என்று மாத்திரமே பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றியுள்ளார்.