நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டப் பட்டம் தொடர்பாக புதிதாக வெளிவந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் மறுத்துள்ளார்.
தம்மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
“இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் ‘பி அறிக்கை’ ஒன்றைத் தாக்கல் செய்து, எனது பட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த அனுமதி பெற்றது.
அதன் பின்னர் பல மாதங்களாக இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றுவரை எந்த விசாரணை முடிவுகளும் வெளியிடப்படவில்லை. எனினும், இணையத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்பப்படுகிறது.
இப்போது நுகேகொடை பேரணி தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அச்சத்தில் உள்ளது.
அதனால் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார்கள். இந்த அவதூறுகள் மற்றும் பழிகளுக்கு 21ஆம் திகதி பதில் கிடைக்கும்” என நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.