போதைப்பொருள் வர்த்தகரான படோவிற்ற அசங்க எனப்படும் ராஜித அசங்கவின் சகா ஒருவர் போதைப்பொருளுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 6 கிராம், கேரளா கஞ்சா 10 கிராம், 4 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம், 5 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.