படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
எத்தியோப்பிய ஏதிலிகள் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் 123ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்