-யாழ் நிருபர்-
இலங்கையில் இருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் இன்று திங்கட்கிழமை காலை அகதிகளாக இந்தியாவை சென்றடைந்தனர்.
இந்தியா – தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில் இவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து, இலங்கை படகு ஒன்றிற்கு ரூபா 400,000 கொடுத்து தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள 1ம் தீடையில் இன்று காலை 07.00 மணிக்கு சென்றடைந்துள்ளனர்.
இவர்கள் தற்போது விசாரணைகளுக்காக இந்தியா – தனுஷ்கோடி பொலிஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.