பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்