நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்தி மரண தண்டனை

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலத்தில் சிறைக் கைதி ஒருவருக்கு புதிய முறையில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது.

1988 ல் அமெரிக்காவின் கோல்பர்ட் கவுன்டி எனும் பகுதியில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி 1996ல் குறித்த இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் ஒருவருக்கு 2010ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் மற்றுமொரு கைதிக்கு 2022ல் விஷ ஊசி செலுத்தி மரணதண்டனையை நிறைவேற்ற முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கமைய தற்போது “நைட்ரஜன் ஹைபாக்சியா” எனும் புதிய முறையில் குறித்த கைதிக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து, குற்றவாளிக்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.