நேபாளத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா கண்காட்சியை நேபாள துணை பிரதமர் பிஷ்ணு பிரசாத் பவுடல் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் எதிர்பாராத விதமாக ஐதரசன் நிரப்பப்பட்ட பலூன்கள் தீப்பிடித்து எரிந்ததில் நேபாள துணை பிரதமரும், நிதி அமைச்சருமான பிஷ்ணு பிரசாத் பவுடல் மற்றும் போக்ரோ நகரஆளுனர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.