நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

நெல்லுக்கான நிர்ணய விலையினை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு நெல் கிலோ ஒன்று ரூ. 120, சம்பா நெல் கிலோ ஒன்று ரூ. 125 மற்றும் கீரி சம்பா நெல் கிலோ ஒன்று ரூ. 132 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.