நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன் தினம் புதன் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை அண்டிய வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்றுக்கு செல்லும் மக்கள் பிரதான நுழைவாயில் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களும், அவர்கள் எடுத்து பொதிகளும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவருகிறது.
மேலும் பிரதான நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.