கல்மடுநகர் மற்றும் பெரிய கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள், அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் மற்றும் தமது வீட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இக்களவிஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழககோன், கிளிநொச்சி மாவட்ட கிளிநொச்சி 55ஆம் படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

