அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைமடு 11 ஆம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கபடி, எல்லே,கிரிக்கெட் போன்ற 3 விளையாட்டுகளில் பிரதேச, மாவட்ட மாகாண குழு விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது அதி உயர்ந்த திறமையை வெளிக்கொண்டு வர தமது பெற்றோர்களும் தமது பயிற்றுவிப்பாளரும் தமது கிராமமுமே தமக்கு உதவுதாக இந்த வீராங்கனைகள் கூறுகின்றனர்.
தமது பிரதான விளையாட்டாக கபடி விளையாட்டு அமைந்திருந்தாலும் அதற்கு அப்பால் கிரிக்கெட் எல்லே போன்ற விளையாட்டுகளிலும் தாமே நாவிதன்வெளி பிரதேசத்தின் புகழை மாகாண ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் உலகிற்கு பறைசாற்றி இருப்பதாகவும், இந்த வீராங்கனைகள் குறிப்பிடுகின்றனர்.
ஜே.கியோனா, கே.தினுஷ்கா, பி. ரூஜானி, கே.சனோஜிகா, எஸ்.ஷஸ்னிக்கா, டி.ஹெமிருக்ஷா, எஸ்.நிதா, ஜே.திவானி, ஆர்.நியுக்ஷனா, எஸ்.தியுக்ஷனா, ஜே. நிதர்ஷனா, ஏ.நிலுக்ஷிகா, டி.சதுர்ஷிகா, டி.தாட்ஷியா ஆகியோரே இவ்வாறு சாதனை புரிந்த வீராங்கனைகள் ஆவர்.