-யாழ் நிருபர்-
யாழ். நாவாந்துறை கலைவாணி சனசமுக நிலையத்தின் 50 ஆவது பொன்விழாவை முன்னிட்டு அவர்கள் நடாத்திய விளையாட்டுப்போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை சைக்கிள் ஓட்ட போட்டியும்இ நேற்று ஞாயற்றுக்கிழமை காலை மரதன் ஓட்ட போட்டியும் நடைபெற்றது. பின்னர் விளையாட்டு போட்டி ஆரம்பமாகியது.
ரி.ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் பிரதம விருந்தினராகவும்இ சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மலர்மகள் தயாபரன் சிறப்பு விருந்தினராகவும்இ ஜேஃ54 கிராம சேவகர் எஸ்.ரமணன் கௌரவ விருந்தினராகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.