-மூதூர் நிருபர்-
பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை ஈச்சிலம்பற்று பொலிஸார் நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
மேலும் இளைஞர் ஒருவர், பெண்ணொருவருடன் (வயது 24) டிக்டொக் சமூக வளைத்தளம் மூலமாக தொடர்பாகி நட்பாகியுள்ளார்.
இந்த பின்ணணியில் அவ்விருவரும் சிறிய காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளார். பின்னர் சந்திப்பு சம்மந்தமாக இளைஞர் தனது நண்பர்களிடம் தெரிவிக்க அங்கு வந்த நண்பர்கள் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.