நானுஓயா மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் எல்ல ஒடிசி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள சுற்றுலாப் பயணிகளின் தேவையின் அடிப்படையில் இந்த ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த ரயில் செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்