நாட்டு நிலை தொடர்பில் பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நாட்டில் பல பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அவசர வேண்டுகோள் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில்,

இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன.

ஏற்கனவே பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானதுஇதற்போது பாரிய அரசியல் அதிகாரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

அரசியல் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை கண்டுணரக் கூடியதாகவுள்ளதுடன், இப்பொருளாதாரச் சிக்கல் சாதாரண மக்கள் மத்தியில்பொருளாதார சிக்கல் முதன்மையானதும் உடனடியானதுமாகும்.

நாட்டின் பல பாகங்களிலும் சாதாரண மக்களின் அமைதியான ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டங்கள்;தொடர்கின்ற அதேவேளை, வன்முறையான அடக்குமுறைகளும் அதிகரிக்கும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

முழுமையாக நோக்குமிடத்துஇஒரு மனிதாபிமான நெருக்கடி நிலை உருவாகி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.இந்த நிலைமை அதிகமான மக்களை வறுமைக்குள் தள்ளவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் வலிமையடையவும் செய்து நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

சமையல் எரிவாயுக்கான வரிசைகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிசைகள் மற்றும் போராட்டங்கள் என பெண்கள் இந்த நெருக்கடியை முன்நின்றுமுகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தீவின், அனைத்து மூலைமுடுக்குகளிலும் உணரப்படுகின்ற அதேவேளை தினக்கூலியில்ஈடுபடுவோர், நுண், சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், நகர்ப்புறத்தில் உழைக்கும் ஏழைகள், வறுமையில் வாடும் பிற சமூகங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்கனவே இன, மத, சாதி, பால்நிலை மற்றும் பாலியல் அடையாளங்களால் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இந்த வலுப் பெற்று:வரும் நெருக்கடியால் அதிகம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

மக்கள் வீடற்ற நிலைமையிலும், வறுமைக்கு முகங்கொடுத்துக் கொண்டும் வாழ்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமானது, இந்த நெருக்கடி நிலைமை ஏற்படும் முன்னரே பிழைப்பு ஊதியத்தில் வாழ்ந்தவர்களை, அவர்களின் கையில் பணம் இல்லாத நிலைமைக்குக் கொண்டுசென்றுள்ளது.

நீண்டகால போர், சுனாமி,ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்று ஆகிய தொடர்ச்சியான சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகளில் மீண்டுமொரு பேரடிக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.

இதற்கு மத்தியில் உண்மை மற்றும் நீதிக்கான தேடலும் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது.

இந்த பொருளாதார நெருக்கடி, குடும்ப மட்டத்தில் அதிக பாதிப்பைச் செலுத்துவதால் பொருளாதார வீழ்ச்சியின் சுமை எப்போதும் பெண்கள் மீது விழுகிறது. பெண்கள் வருமானம் ஈட்டுதல் மற்றும் தங்கள் வீட்டில் ஊதியமற்ற பராமரிப்பு வேலை ஆகிய இரட்டைச் சுமைகளை எதிர்கொள்கின்றனர்.

பெண்கள் தமது பிள்ளைகளின் நலனை உறுதிப்படுத்துவதில் சிரமப்படுகிறார்கள்:

இதற்கு கல்விக்கான தடங்கல், வீட்டுவன் முறை மற்றும் தனித்தாய்மார்களின் பராமரிப்புக் கொடுப்பனவுகளுக்கான செயற்றினற்ற மற்றும் நியாயமற்ற முறைமைகள் என்பன காரணங்களாகும்.

பொருளாதார வீழ்ச்சி, வாழ்வதன் நிச்சயமற்ற தன்மை, பசி, அடிப்படை வசதிகள் இல்லாமை பற்றிய ஏமாற்றங்கள் மற்றும் அச்சங்கள் வீட்டிற்குள்ளே வன்முறையாக வெடித்து, பெண்கள் மற்றும் பிள்ளைகளை பாதிக்கின்றன.

குடும்பத்தின் மீதான பலதரப்பட்ட அழுத்தங்களின் விளைவாக குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே வன்முறையில் வாழும் பெண்களுக்கு இன்னும் கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட தெரிவுகளே எம்மை இந்த நெருக்கடி நிலைக்குள் தள்ளியுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் ஆடை உற்பத்தித்துறைகளில் பணிபுரிதல் மற்றும் வெளிநாடுகளில் வீட்டு வேலைத் தொழிலாளர்களாக வேலை செய்தல் என்பவற்றால் பெண்கள், அதிக அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருபவர்களாக உள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேசமயம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கையானது பெண்களின் உழைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெண்களின் பௌதீக நிலைமைகள், வளர்ச்சி, அபிலாஷைகள் மற்றும் சமூகத்தில் அவர்களது நிலை ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் உழைப்பைச் சுரண்டிச் சேகரித்த செல்வம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுரண்டலுக்கு எந்தவித பொறுப்புக்கூறலும் இல்லை. மாறாக, பொருளாதார நெருக்கடியின் சுமையை மீண்டும் பெண்கள் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் இதுவரையான தீர்வுகள் மேலும் கடன்களைப் பெறுவது, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது என மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றும் பிற நிறுவனங்கள் கடுமையான சிக்கனக் கொள்கைகள் மூலம் நிதி ஒருங்கிணைப்பை செயற்படுத்தக்கூடும் என்பது வருத்தமளிக்கிறது.

பொதுவாக, கடனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிக்கனக்கொள்கையையே தந்திரோபாயமாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், நேரடி வரி அதிகரிப்பு போன்ற பிற்போக்கான வரிக் கொள்கைகள் மற்றும் பொதுச் செலவினை குறைப்பது போன்றன உற்பத்தித்திறன் மேம்பாடுகளை பாதிப்பதுடன்இ சமூக உட்கட்டமைப்பு உள்ளிட்ட பங்கேற்பு பொருளாதார வளர்ச்சிக்கான நிலையை மேலும் நிலைகுலையச் செய்யும்.

மனித உற்பத்தித்திறன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு சுகாதாரம், கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளில் போதிய முதலீடு செய்தல் அத்தியாவசியம். இந்த பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வுகள், நவதாராளவாத பொருளாதார வல்லுநர்களதும், பேரியப் பொருளாதார விவரிப்புகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாக உள்ளன.

இதனூடாக பெண்கள், உழைக்கும் மக்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் வாழும் சமூகங்களின் மனிதம் அழிக்கப்பட்டு, அவர்களின் அழுத்தமான துன்பங்களை உள்வாங்காத தீர்வுகளே முன்வைக்கப்படுகின்றன.

இவை, பொருளாதார வீழ்ச்சியின் மனிதாபிமானமற்ற தன்மையை கவனியாதிருக்கிறது.

நெருக்கடிக்கான நீண்டகால காரணங்களான அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் முற்போக்கான வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தாமை என்பன கவனிக்கப்படாமலும், தீர்வு காணப்படாமலும் இருக்கும் இந்நிலையில், அரச சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது மேலும் அதிகமாக சுமத்திவிடும் என நாம் நம்புகிறோம்.

இந்தப் பின்னணியில், பட்டினி மற்றும் இடர்பாடுகளை தடுப்பதில் கவனம் செலுத்தி, தேசிய அளவிலான மனிதாபிமான செயற்பாட்டு முன்னெடுப்பை அவசரமாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் சீர்குலைவுக்கு மத்தியிலும் அரச இயந்திரமானது மக்களின் பொதுநலன் சார்ந்த கடமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தத் தேவையை வினைத்திறனுடன் சந்திக்கக்கூடிய, சிவில் ஜனநாயக மற்றும் மக்களுடைய நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையிலான அடிப்படை ஆட்சி நிர்வாகம் ஒன்று நாட்டு மக்களின் உடனடித் தேவையாகவுள்ளது.

மேலே வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றநோக்கில் கோரப்பட்டவையாகும்.

நெருக்கடி நிலையிலிருந்து வெளிவரும் பொருட்டு நாட்டினுள்ளும், நாட்டிற்கு வெளியேயும் அரசாங்கம் முன்னெடுக்கும் தனது அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்தத் தேவைகளைக் கவனத்தில் கொள்வதோடு, ஏற்ற விதத்தில் வளங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு முகம்கொடுக்கையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்:

1. நாடளாவிய ரீதியில் உணவு விநியோக முறைமையொன்றைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி, அடிப்படை அத்தியாவசிய உணவுப் பொதிகள் அனைத்து வீடுகளுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும்: அடிப்படை உணவுகளுள் அரிசி, எண்ணெய், சீனி, தேயிலை, பருப்பு, திரிபோசா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதுள்ள சதொச, சமுர்த்தி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆபத்தான சூழலில் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் வறுமைக்குள் வீழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

அதனால் பொதுவான உலகளாவிய உணவு விநியோக முறைமையொன்று அவசியம். சில பொருளாதார ஆலோசகர்களின் பரிந்துரைப்படி இலக்கு வைத்த’ தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையிலுள்ளவர்களை மட்டும் சென்றடையும் விதத்திலான’ திட்ட யோசனை உண்மையான சூழலில்பிரச்சினைகளைத் தீர்க்காது.

மேலும், இவ்வாறான திட்டங்கள் அதிகரித்து வரும் வறுமைக்கு மத்தியில் உதவிகளை தாமதமாக்குவதுடன், மக்களுக்கு மேலும் தீங்குவிளைவிக்கும். இலக்குவைத்தல் என்பது சமூகப் பிரிவினைகளை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள மக்களின் கவலைஇ அச்சம் மற்றும் கோபத்தை மேலும் தூண்டிவிடும்.

2. ஊட்டச்சத்து மற்றும் உணவு இறையாண்மைக்கு முன்னுரிமை வழங்குதல்: இதற்கு மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவது அத்தியாவசியமாக உள்ளது.

விவசாயிகளுக்கு அவசர உதவிகள் மற்றும் மானியங்களை வழங்கல், மீனவர்கள் மற்றும் ஏனைய விவசாய சமூகங்களுக்கான உதவிகள் உடனடியான அமுலுக்கு வரவேண்டும்.

மேலும் 2022 ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துப் பொதியை வழங்கும் விடயம் 24 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அத்துடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளின் அழுத்தத்தைத் தணிக்க நாட்டின் பிரஜைகளுக்கு நிவாரணப் பொதி, பாடசாலை மதிய உணவுத் திட்டம் மற்றும் பிள்ளைகளுக்கான வீட்டு மட்டத்திலான நிவாரணம் வழங்குதல் ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படல் வேண்டும்.

3. சமுர்த்தியின் மூலக்கருத்தான மக்கள் நலனை மையப்படுத்திய உதவி அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்: பல மாவட்டங்களில் சமுர்த்தி உதவிகள் வழங்கப்படுவதுபலருக்கு நிறுத்தப்பட்டு வருவதுடன்இசமூக மட்ட சமுர்த்தி கூட்டங்களில் இவ்வுதவி நிறுத்தப்படுவதற்கான காரணத்தை வினவும்போது பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன.

எவ்வாறாயினும், மேலும் அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுவதால்இ சமுர்த்தி நன்மைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சமுர்த்தி அங்கத்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும்.

4. மருந்துகள், ஏனைய அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மகப்பேற்று சுகாதார சேவைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றை வழங்குவதற்கும் சுகாதாரத் துறைக்கு அரசாங்கம் உதவி செய்தல் வேண்டும்.

5. பட்டினி, வீடற்ற நிலை, வறுமை மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றுக்குத் தீர்வினை வழங்கக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் (பரிந்துரை, உதவி மற்றும் சேவைகள்): பட்டினி, வீடற்ற தன்மை, வறுமை மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் அவசர உதவித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

இத்திட்டங்களை நாடு முழுவதும் உள்ள நலிவுக்குள்ளாக்கப்பட்ட நபர்கள்பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். சேவைகளைப் பாரபட்சத்துடனோ, முன் தீர்ப்பிடல் செய்தோஇ வழங்காதிருக்கும்படி அரச ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் ரீதியான மற்றும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளின் அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகிவரும் நிலையில், பெண்கள் மற்றும் பிள்ளைகளை மையமாகக் கொண்ட தங்குமிடங்கள் உள்ளிட்ட உதவிச் சேவைகள் வழங்கப்படுவதை அரச மற்றும் அரச சார்பற்ற சேவைகள் உறுதி செய்தல் வேண்டும். உரிய நேரத்தில் தீர்வுகள் வழங்கப்படல் வேண்டும்.

அவசர தொலைபேசி அழைப்புக்களில் உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, அதாவது பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்மேல் பழிபோடாமல் அல்லது அவரை அவமானப்படுத்தாமல், அவரின் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பொருட்டு அவரது உரிமைகளையும், தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாத்து, பாதிப்பிலிருந்து வெளிவர அவருக்கு உதவுகின்ற அணுகுமுறை பின்பற்றப்படல் வேண்டும்.

6. மேற்குறிப்பிடப்பட்ட தேசிய மட்டத்திலான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நாட்டின் அரச வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு, உடனடி நடவடிக்கைகளாக சொத்து வரிவிதிப்புக்கள் உள்ளிட்ட முற்போக்கான வரிவிதிப்புகளை அறிமுகம் செய்தல் வேண்டும்: மறைமுகமான வரிவிதிப்புகள் நாட்டின் ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் சுமையை அதிகரிக்காத ஒரு சூழலை உறுதி செய்தல் வேண்டும்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுடன், நெருக்கடி சூழல்களுக்குப் பதிலளிக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்துவதற்கு அரச வருமானம் பயன்படுத்தப்படல் வேண்டும்.

7. மக்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைசார் கொள்கைகள் மற்றும் காணிக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தல்: அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் மக்களின் தேவைகளை, கனவுகளை, காலநிலை நெருக்கடியினை, மக்களை மையமாகக் கொண்ட வேலைசார் கொள்கையின் அவசியத்தினை நிவர்த்தி செய்யவில்லை. நெருக்கடி நிலைமையின் கீழ்இஊழியச் சுரண்டலை நோக்கி நகரும் போக்கைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வேலைப் பாதுகாப்பு மற்றும் காணி உரிமைகள் மாற்றப்படக்கூடாது.அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தி மேம்பாட்டுக்காக சிறு விவசாய உற்பத்தியாளர்களாயுள்ள பெண்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்க வேண்டும்.

8. பெண்களுடன் ஆலோசித்தல்: இந்த நெருக்கடிக்குப் பதிலளிப்பதற்குப் பெண்களின் ஆலோசனையும் பங்கேற்பும் தேவை. தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் காணப்படும் பெண்களின் மிகக்குறைந்த பிரதிநிதித்துவத்தைக் கருத்திற்கொண்டு, ஆலோசனை வழங்கும் அமைப்புகளிலும், செயல்முறைகளிலும் பெண்களின் நேரடி ஈடுபாட்டை உறுதிப்படுத்துவது அவசியம். குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவம் இங்கு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இறுதியாக, நமது ஒட்டுமொத்த எதிர்காலத்தையே

அழித்துப் போடும் அச்சுறுத்தலான இந்த மனிதாபிமான அவசரநிலைக்கு பதிலளிக்கும் பொருட்டும், உடனடி நடவடிக்கையை முன்னெடுக்கும் பொருட்டும், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மீனவர்கள் கூட்டமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், சமய நிறுவனங்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு அரசியல் அமைப்புக்கள் ஆகிய அனைவரையும் இத்தோடு ஒருங்கிணைந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இறுதியாக, நமது ஒட்டுமொத்த எதிர்காலத்தையே அழித்துப்போடும் அச்சுறுத்தலான இந்த மனிதாபிமான அவசரநிலைக்கு பதிலளிக்கும் பொருட்டும், உடனடி நடவடிக்கையை முன்னெடுக்கும் பொருட்டும், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மீனவர்கள் கூட்டமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், சமய நிறுவனங்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு அரசியல் அமைப்புக்கள் ஆகிய அனைவரையும் இத்தோடு ஒருங்கிணைந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம், என குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஆளுமை பெண்கள் குழு, முல்லைத்தீவு
2. பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், அக்கரைப்பற்று
3. வியர்வை துளிகளின் கூட்டமைப்பு, கட்டுநாயக்கா
4. மகளீர் அபிவிருத்தி நிலையம் யாழ்ப்பாணம்
5. மன்னார் மாதர் அபிவிருத்த ஒன்றியம்
6. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம், புத்தளம்
7. நிஷா அபிவிருத்திக் குழு, முல்லைத்தீவு
8. முற்போக்கு பெண்கள் கூட்டமைப்பு, கொழும்பு
9. Revolutionary Existence for Human Development, Katunayake
10.Sisterhood Initiative, Colombo
11. Stand Up Movement, Colombo
12. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு
13. The Grassrooted Trust
14. ஊவா வெல்லச பெண்கள் அமைப்பு, மொனறாகலை
15. வல்லமை – சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம், யாழ்ப்பாணம்
16. பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு
17. பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
18. அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு, கிழக்கு மாகாணம்
19. பெண்கள் அபிவிருத்தி நிலையம், பதுளை
20. பெண்கள் வள நிலையம், குருநாகல்
21. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு