நாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.