மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.