நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் பலத்த அடிகள் காரணமாக பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வத்துபிட்டிவல வைத்தியசாலையின் ஆலோசகர் சட்ட வைத்திய அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடலில் பல எலும்பு முறிவுகள் காணப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை சட்டவைத்திய அதிகாரி நிராகரித்துள்ளார்.
கடந்த மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
