-மூதூர் நிருபர்-
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பானது.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு பாடசாலை மாணவர்களும், வெளிவாரி பரீட்சாத்திகளும் உட்சாகத்துடன் சென்றதையும் காணமுடிந்தது.
மேலும் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.