நடமாடும் சேவை: கிரான்

-கிரான் நிருபர்-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடத்தப்படும் நடமாடும் சேவை இன்று புதன் கிழமை 6/9 கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் சு.ராஜ்பாவு தலைமையில் இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் அடையாள அட்டை, பிறப்பு, விவாக மற்றும் மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம், ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், சுகாதார சேவைகள், சமூர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு, பொலிஸ் பதிவுகள் உள்ளிட்ட மேலும் பல சேவைகள் இடம்பெற்றன.

இந்த நடமாடும் சேவை நிகழ்வில் ஏ.எம்.எம் அலியார் மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர், எஸ். சிவலக்ஷன் பிரதேச வைத்தியார் மற்றும் எஸ்.ஜெயசேகர் சமூக சேவை உத்தியோகஸ்தர், சுதேச வைத்தியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

நடமாடும் சேவை: கிரான்

நடமாடும் சேவை: கிரான்

நடமாடும் சேவை: கிரான்

நடமாடும் சேவை: கிரான்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்