-மூதூர் நிருபர்-
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று திங்ககிழமை அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக கவலை தெரிவித்தனர்.