-மூதூர் நிருபர்-
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்திலுள்ள தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலியை காட்டு யானைகள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை சேதப்படுத்தியுள்ளன.
குறித்த பகுதிக்குள் உட்புகுந்த காட்டு யானைகளே இவ்வாறு சுற்று வேலியை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு மைதானத்தில் காணப்பட்ட வேப்பமரமொன்றை முறித்து சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகளால் தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தின் சுற்று வேலியானது நான்காவது தடவையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தோப்பூர் பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டுச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தி மைதானத்தை சுற்றி யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.