மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொழுநோய் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணியானது நகரின் பிரதான வீதிகளுடாக மட்டக்களப்பு நகரை சென்றடைந்து பின்பு பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன், வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் பாடசாலை மாணவிகள் என பலரும் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.