-மஸ்கெலியா நிருபர்-
மலையகத்தின் இலக்கிய முன்னோடியும் வங்கக் கவிஞர் தாகூரின் பாராட்டுதலைப் பெற்றவரும், கவிஞரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வீ.கே. வெள்ளையனுடன் இணைந்து நிர்வாகப் பொறுப்பாளர் பதவி வகித்தவருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் 41 ஆவது சிரார்த்த தினம் நேற்று முன்தினம் புதன்கிழமை நினைவு ஸ்தூபி அமைந்துள்ள வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மடக்கும்புர தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜையில் தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கணபதி நகுலேஸ்வரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிர்வாகச் செயலாளர் கே. ஸ்ரீதரன், முன்னாள் நிர்வாகச் செயலாளர் எஸ். வீரப்பன் உட்பட முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.