ஆபாச வீடியோக்களை பார்த்த 13வயது அண்ணன் : உறக்கத்தில் இருந்த 9 வயது தங்கையை பலத்காரம் செய்து கொலை

கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த 13 வயதான அண்ணன் அருகில் உறக்கத்தில் இருந்த 9வயது தங்கையை பாலியல் பலத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில், கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

உறக்கத்தில் இருந்த 9 வயது சிறுமி விசப்பூச்சி கடித்து திடீரென இறந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு ,கழுத்து எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமியை கொலை செய்தவர்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 50 பேரிடம் விசாரணையில்; பொலிஸார் ஈடுபட்டனர். இந்தநிலையில் சிறுமியின் குடும்பத்தினர் மீது சந்தேகம் வந்துள்ள நிலையில் கிடுக்கிப்பிடியில் விசாரணை நடந்துள்ளது.

இந்தநிலையில் சிறுமியின் சகோதரனே இந்த கொடுமையை செய்துள்ளமையும் இந்த குற்றங்களையெல்லாம் வெளியில் தெரியாமல், அவரின் அம்மா மறைத்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அண்ணனிடம் விசாரணை :-

சம்பவத்தன்று தங்கைக்கு பக்கத்திலேயே அண்ணனும் படுத்துக்கொண்டு, கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்திருக்கிறான். அப்போதுதான் திடீரென சகோதரன், தங்கையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதைப் பற்றி அப்பாவிடம் சொல்லப்போவதாக அழுதுகொண்டே தங்கை சொன்னாளாம். இதனால் பயந்துபோன அண்ணன், தங்கையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். தங்கை கண்ணெதிரே இறந்துவிடவும், இதைப்பார்த்து கதிகலங்கி போன அண்ணன், உடனே அம்மாவிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறான்.

அம்மாவும் ஏனைய 2 சகோதரிகளும் சேர்ந்து இந்த விடயத்தை மூடி மறைத்திருக்கிறார்கள். இறுதியில் பொலிசாரிடம் சிறுமியின்  17மற்றும் 18 வயது 2 சகோதரிகள், அம்மா ஆகியோர் நடந்த சம்பவத்தையெல்லாம் வாக்குமூலத்தில் கூறி ஒப்புக்கொண்டனர்.

பொலிசாரின் அறிக்கை :-

இந்த விடயம் குறித்து பொலிஸ் அதிகாரி விவேக் சிங் சொல்லும்போது, “ஏப்ரல் 24ஆம் திகதி ஜாவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு வீட்டில் 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சிறுமியின் 13வயது சகோதரன் அருகில் தூங்கியது தெரியவந்தது. அதோடு, அவர் கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துவிட்டு, தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமி இதை பற்றி அப்பாவிடம் சொல்லப்போவதாக கூறியிருக்கிறாள். இதைக்கேட்டு பயந்த அண்ணன், அந்த தங்கை சுயநினைவை இழக்கும் வரை கழுத்தை நெரித்துவிட்டு, அதற்கு பிறகே தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்பியிருக்கின்றான் ஆனால் தங்கை உயிரோடிருப்பதை பார்த்த அண்ணன் மறுபடியும் கழுத்தை நெரித்துள்ளார். அப்போதுதான் தங்கையின் உயிர் பிரிந்துள்ளது.

இவ்வளவு நடந்து முடிந்தபிறகுதான் தூங்கி கொண்டிருந்த மற்ற சகோதரிகள் கண் விழித்துள்ளார்கள். இதனை மூடி மறைப்பதற்காகவும், பொலீஸக்கு தெரியாமல் இருப்பதற்காக வழக்கமான இடத்தை விட்டு வேறு இடத்தில் போய்படுத்துக் கொண்டார்கள். மறுநாள் காலையில், விஷப்பூச்சி கடித்து, என் மகள் இறந்துவிட்டாள் என்று அம்மா கதறி அழுது நாடகம் போட்டிருக்கிறார்.

இதே காரணத்தைதான், பொலிசாரிடம் அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், கழுத்து எலும்புகள் உடைந்ததும் என எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பொலிஸ் சிறப்பு விசாரணைக்குழு மொத்தமாக 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் வாக்குமூலம் மட்டும் வித்தியாசமாக இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்த சம்பவமானது ஜாவா பகுதியில் மட்டும் அல்லாது நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு , கையடக்க தொலைபேசியின் பாவனையால் இளம்சமூத்தினரிடன் கலாசார சீரழிவுகளும் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க