கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.